Paristamil Navigation Paristamil advert login

 சீனாவில்அமுல்படுத்தப்பட்ட புதிய சட்டம்

 சீனாவில்அமுல்படுத்தப்பட்ட புதிய சட்டம்

16 ஆனி 2024 ஞாயிறு 15:08 | பார்வைகள் : 1421


தென் சீனக் கடலுக்குள்  வெளிநாட்டவர்  நுழைந்தால், அவரை சீனக் கடலோரக் காவல்படை கைது செய்யப்படுவார்கள் என ஜூன் 15 ஆம் திகதி அன்று புதிய சட்டம்  அமுலுக்கு வந்துள்ளது.

AlJazeera-வின் அறிக்கையின்படி, தென் சீனக் கடலில் ஊடுருவும் தீவிர வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களை 60 நாட்களுக்கு விசாரணையின்றி சீனா சிறை வைக்க முடியும்.

தென் சீனக் கடல் முழுவதையும் சீனா தனது பகுதியாகக் கோருகிறது. 

பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற தெற்காசியாவின் பல நாடுகளும் உரிமை கோருகின்றன.

தென் சீனக் கடலில் நிலவும் சர்ச்சையைக் கருத்தில் கொண்டு சீனப் படகுகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவின் கப்பல்கள் இப்பகுதியில் இருப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்