இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்.... ஈரான் ஜனாதிபதி கண்டனம்
11 கார்த்திகை 2023 சனி 08:35 | பார்வைகள் : 4553
இஸ்ரேல் காசா மீது கடும் பயங்கரமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இதனை கண்டித்து சில நாடுகள் காசாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் காஸாவில் ஏற்பட்டுள்ள போர் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொந்தளித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்படும் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் நிலையில், இனி பேச்சுவார்த்தைகளால் பயனேதும் இல்லை எனவும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஸா தொடர்பில் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை. செயலில் இறங்க வேண்டிய தருணம் இது என சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் செல்வதற்கு முன் தெஹ்ரான் விமான நிலையத்தில் ஜனாதிபதி ரைசி கூறியுள்ளார்.
அத்துடன், இன்று இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் - காஸா போர் தொடர்பில் விவாதிக்க ரியாத்தில் ஒரு அசாதாரண இஸ்லாமிய-அரபு உச்சிமாநாட்டை சவுதி அரேபியா நடத்த உள்ளது.
கூட்டாக முன்னெடுக்கப்படும் இந்த உச்சிமாநாட்டில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 11,100 கடந்துள்ள நிலையிலேயே சவுதி அரேபியாவில் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர கூட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.