உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்தது - அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம்
11 கார்த்திகை 2023 சனி 08:41 | பார்வைகள் : 5923
உலக மக்கள்தொகை தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.
உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.
மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளது. எதிர்வரும் 2060 ஆம் ஆண்டு அது 39 ஆக உயரும்.
கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
கடந்த 1960 - 2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங் காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது.
பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண் டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan