Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசால் மட்டுமே நாட்டில் மாற்றத்ததை ஏற்படுத்த முடியும் - ராகுல் காந்தி

காங்கிரசால் மட்டுமே நாட்டில் மாற்றத்ததை ஏற்படுத்த முடியும் - ராகுல் காந்தி

12 கார்த்திகை 2023 ஞாயிறு 12:44 | பார்வைகள் : 1941


பா.ஜனதா மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதி போன்ற டோரலா அரசுகளால் தெலுங்கானா மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது  என ராகுல் காந்தி கூறியுள்ளார்

தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட கும்மரி சந்திரய்யா என்ற விவசாயியின் வீட்டுக்கு பிரசாரத்துக்கு இடையே சென்றிருந்தார். அங்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் கேட்டுக்கொண்டார்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டு இருந்தார். அத்துடன் மத்திய-மாநில அரசுகளை கடுமையாக தாக்கி அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரிசையில் கடைசியாக இருப்பவரின் குரல் முக்கியமானது என ஒருமுறை மகாத்மா காந்தி கூறியிருந்தார். கும்மரி சந்திரய்யாவின் குரல் அத்தகையது. ஆனால் தெலுங்கானா அரசு அதை கேட்க தவறிவிட்டது. தெலுங்கானாவைச் சேர்ந்த சிறு விவசாயியான இவர், அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்பட்டு, கடன் சுமையால் அவதிப்பட்டு வந்தார். அவர் தனது அன்பான குடும்பத்தை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அரசின் உதவி சரியான நேரத்தில் கிடைத்திருந்தால் தனது அன்பானவர்களுடன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார். பா.ஜனதா மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதி போன்ற டோரலா அரசுகளால் தெலுங்கானா மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

அப்படியானால் காங்கிரஸ் கட்சியால் முற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? நிச்சயமாக ஆம். காங்கிரசின் உத்தரவாதங்கள், வரிசையில் கடைசியாக நிற்கும் கோடிக்கணக்கான குரல்களின் விருப்பங்களின் வெளிப்பாடுதான்.

எங்கள் வாக்குறுதிகள் தெலுங்கானாவில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச தளத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. தனது குடும்பம் கடன் சுமையில் தொடர்ந்து போராடுவதாக கும்மரி சந்திரய்யாவின் மனைவி என்னிடம் கூறினார். இது மிக விரைவில் மாறும்.

மக்கள் அனைவருக்கும் நியாயம், நீதியை உறுதி செய்வதே இப்போதைய எங்கள் போராட்டம். இந்தியா முழுவதும் மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியின் சகாப்தத்தை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்