யூத எதிர்ப்புக்கு எதிராக பேரணி! - 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்..
12 கார்த்திகை 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 4413
இன்று பிற்பகல் பரிசில் இடம்பெற உள்ள பேரணியின் போது காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தமாக 3,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
யூத எதிர்ப்பு தாக்குதல்களைக் கண்டித்து பரிசில் இந்த பேரணி ஒன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவான நிலையில், இன்றைய பேரணியின் போது சட்ட ஒழுங்கினை உறுதிப்படுத்த காவல்துறையினர், ஜொந்தாமினர் என 3,000 வீரர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரான்சுவா ஒலோந்து, நிக்கோலா சர்கோஷி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் பிரான்சில் 1,247 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 539 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.