Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவின் முக்கிய மருத்துவமனை செயல்பாடு நிறுத்தம்!

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவின் முக்கிய மருத்துவமனை செயல்பாடு நிறுத்தம்!

12 கார்த்திகை 2023 ஞாயிறு 07:18 | பார்வைகள் : 3084


காஸாவின் மிகப் பெரிய மற்றும் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவில் இஸ்ரேல் படையினா் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்த மருத்துவமனையில் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் இஸ்ரேல் குண்டுவீச்சில் படுகாயமடைந்து அந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவா்கள் உடனடியாக உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் அஷ்ரஃப் அல்-கீத்ரா சனிக்கிழமை கூறியதாவது:இஸ்ரேல் படையினரின் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் அல்-ஷிஃபா மருத்துவனையின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.அங்கு எரிபொருள் கையிருப்பு முற்றிலும் தீா்ந்துவிட்டது. அதனால் அந்த மருத்துவமனையில் ‘ஜெனரேட்டா்’கள் இயங்காமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக, ‘இன்குபேட்டரில்’ வைக்கப்பட்டிருந்த ஒரு சிசு உயிரிழந்தது. இதுபோல் அங்கு 45 சிசுக்கள் உள்ளன என்றாா் அவா்.

ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த ஒரு மாதமாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.அத்துடன், காஸாவுக்குள் உணவு, குடிநீா், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள் செல்வதற்குத் தடை விதித்து, அந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அதற்காக காஸாவுக்குள் தரைவழியாக தாக்குதல் நடத்தி படிப்படியாக முன்னேறி வந்தது.எனினும், காஸாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா்.அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினா் ரகசியமாக அமைத்துள்ள சுரங்க நிலைகள் இஸ்ரேல் ராணுவத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும், அந்த நிலைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவத்துக்கு ஹமாஸ் அமைப்பு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்