Paristamil Navigation Paristamil advert login

தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..?

தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிப்பதால்   கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..?

12 கார்த்திகை 2023 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 2195


முன்னோர்கள் வாரம் ஒரு முறையேனும் கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். அதற்குக் காரணம் என்ன தெரியுமா ? அதனால் நம் உடலில் ஏற்படும் நலன்கள் பற்றித் தெரியுமா?

நரையிலிருந்து தப்பிக்கலாம் : தலை முடி இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம் வறண்ட வேர்கள்தான். இதனால் நரை மட்டுமன்றி, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளும் வரும். இதனைப் போக்க வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளித்தால் இந்தப் பிரச்னை தீரும்.

பளபளப்பு மற்றும் உறுதித் தன்மை : பெண்களுக்கு நீண்ட முடி வேண்டும். ஆண்களுக்கு உறுதியான முடி வேண்டும். இவை இரண்டிற்கும் ஒரே பதில் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். எண்ணெய், தலை முடி வேர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கக் கூடியது.

மூளைக்கு ஓய்வு : தலைக்கு நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் சொர்க்கமே கண்களுக்குத் தெரியும். அந்த அளவிற்கு மூளையும் மனதும் ஓய்வு நிலைக்குச் செல்லும். அவ்வாறு மசாஜ் செய்யும்போது எண்ணெய் நன்கு வேர்களால் உறிஞ்சப்பட்டு எண்ணெய் பதம் இருக்கும்.

முடி வளர்ச்சி தூண்டப்படும் : தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது வேர்களில் படுமாறு தேய்ப்போம். அவ்வாறு தேய்க்கும்போது முடி வளர்ச்சிக்கான நரம்புகள் தூண்டப்பட்டு , இறந்த செல்கள் நீங்கி அந்த இடத்தில் புதிய முடி உருவாகும்.

எவ்வாறு குளிப்பது : எண்ணெய்யை வெதுவெதுப்பான பதத்தில் காய்ச்சி அதை அப்படியே கைகளில் கொட்டி வேர்களில் படுமாறு தேய்க்க வேண்டும். பின் கை விரல்களால் மசாஜ் போல் தேய்த்து அழுத்தம் தர வேண்டும். இவ்வாறாக 15 முதல் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். பின் சூடான நீரில் அரிசி வடித்த கஞ்சி கலந்த சீக்காய் தேய்த்து தலைக்குக் குளிக்க வேண்டும். பின் டவலால் நன்கு தேய்த்தால்தான் எண்ணெய் பிசுபிசுப்பு முடியிலிருந்து நீங்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தால் தலை முடி நீங்கள் நினைத்துப்பார்க்காத வளர்ச்சியைப் பெறும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்