Paristamil Navigation Paristamil advert login

யூரோ கிண்ணம் தகுதிச்சுற்றில் களமிறங்கும் இஸ்ரேல் கால்பந்து அணி

 யூரோ கிண்ணம் தகுதிச்சுற்றில் களமிறங்கும் இஸ்ரேல் கால்பந்து அணி

12 கார்த்திகை 2023 ஞாயிறு 11:24 | பார்வைகள் : 1535


காஸா மீதான தாக்குதல் உலக அளவில் பொதுமக்கள் மத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகின்றது.

இந்நிலையில், கொசோவோவுடனான யூரோ கிண்ணம் தகுதிச் சுற்று மோதலுக்கு இஸ்ரேலின் கால்பந்து அணி தயாராகி வருகிறது.

இஸ்ரேல் களமிறங்கும் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒருபக்கம் வலுத்துவருகிறது. 

ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி காஸா மீது போரை முன்னெடுத்து வரும் இஸ்ரேலுக்கு இது முதல் சர்வதேச போட்டி என்றே கூறப்படுகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வாய்ப்பிருப்பதாக கொசோவோ பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர். 

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக கொசோவோ பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள 14,000 டிக்கெட்டுகளையும் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, டிக்கெட்டுடன் அடையாள அட்டையும் ரசிகர்கள் வைத்திருக்க வேண்டும்.

இதனிடையே, பார்வையாளர்கள் எவருமின்றி விளையாட்டை முன்னெடுக்கும் திட்டமும் இருப்பதாக கொசோவோ கால்பந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

தேசிய அணிக்காக கொசோவோ ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், இஸ்ரேல் அல்லது காஸாவுக்கு ஆதரவாக எந்த முழக்கமும் முன்வைக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிப்பதும் நாட்டை மதிப்பதும் ஒன்று தான் எனவும் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 15ம் திகதி நடக்க வேண்டிய இந்த ஆட்டம், 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

காஸா மீதான தாக்குதல் நீடித்து வரும் நிலையில் கொசோவோவின் முக்கிய நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான குடிமக்கள் இஸ்லாமியர்கள் என்ற போதும் கொசோவோ தொடர்ந்து அமெரிக்க ஆதரவு நாடாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்