சவுதி புரோ லீக் தொடர்- அல் நஸர் அணியின் 10வது வெற்றி
12 கார்த்திகை 2023 ஞாயிறு 11:29 | பார்வைகள் : 6106
சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் வெஹ்டாவை வீழ்த்தியது.
கிங் அப்துல் அஜிஸ் மைதானத்தில் நடந்த அல் நஸர் மற்றும் அல் வெஹ்டா அணிகள் மோதின. ஆட்டத்தின் 11வது நிமிடத்திலேயே அல் நஸர் அணி வீரர் அலெக்ஸ் டெல்லெஸ் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அல் அம்ரி 39வது நிமிடத்தில் கோல் அடிக்க, 49வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோலினால் மைதானமே அதிர்ந்தது.
அதாவது, அல் வெஹ்டா வீரர் ஒருவர் பந்தை சக வீரருக்கு கடத்தும்போது, குறுக்கே திடீரென புகுந்த அல் நஸரின் சமி அல் நஜெய் பந்தை தடுக்க முயற்சித்தார்.
அவரது காலில் பட்டு உயரே பறந்த பந்தை எதிரணி வீரர் தலையால் முட்டி கோல் கீப்பருக்கு தள்ளினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ரொனால்டோ குறுக்கிட்டு அலட்டிக் கொள்ளாமல் கோல் அடித்தார்.
அதன் பின்னர் அல் வெஹ்டா அணி வீரர் அன்செல்மோ 81வது கோல் அடித்தார்.
எனினும் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது அல் நஸர் அணிக்கு நடப்பு சவுதி புரோ லீக் சீசனில் 10வது வெற்றி ஆகும்.





திருமண பொருத்தம்
இன்றைய ராசி பலன்


















Bons Plans
Annuaire
Scan