Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா தலைவரின் கருத்து

இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா தலைவரின் கருத்து

12 கார்த்திகை 2023 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 4335


இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர், இரண்டாவது முறையாக Sayyed Hassan Nasrallah தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

லெபனான் எல்லையில் முன்னெடுக்கப்படும் சண்டை ஒரு முழுமையான போராக மாறும் வாய்ப்பு இருப்பதாக அவர் முன்னர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமை பேசிய அவர், ஹிஸ்புல்லா அமைப்பு சாமர்த்தியமாக செயல்பட்டு எதிரியின் பல எண்ணிக்கையிலான இலக்குகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலூக்கு எதிராக போருக்கு தயார் நிலையிலேயே இருப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக லெபனானை போருக்கு தூண்டும் வேலையை ஹிஸ்புல்லா முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஹிஸ்புல்லா தொடர்ந்து தவறிழைத்து வருவதாகவும், காஸாவில் முன்னெடுக்கும் தாக்குதலை லெபனானிலும் நாங்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

1982ல் ஈரானின் புரட்சிப்படை தலைவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஹிஸ்புல்லா அமைப்பு. இந்த அமைப்பு 2006ல் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு மாத காலம் நீண்ட போர் ஒன்றையும் முன்னெடுத்துள்ளது.

இக்குழுவினர் லெபனான்-இஸ்ரேல் எல்லையில் அக்டோபர் 8 முதல் இஸ்ரேலியப் படைகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். 

 ஹிஸ்புல்லா பெரும்பாலும் இஸ்ரேல் இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளது.

இஸ்ரேல் பதிலடிக்கு இதுவரையில் 70 வீரர்களை ஹிஸ்புல்லா இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்