யூத எதிர்ப்புக்கு எதிரான பேரணி! - நாடு முழுவதும் 182,000 பேர் பங்கேற்பு!
12 கார்த்திகை 2023 ஞாயிறு 18:37 | பார்வைகள் : 4339
பரிசில் இன்று மாலை மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. யூத மக்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கண்டித்தும், அவர்களுக்கு ஆதரவாகவும் இந்த பேரணி இடம்பெற்றது.
தலைநகர் பரிசில் 105,000 பேர் பேரணியில் பங்கேற்றதாக பரிஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். 1990 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற்ற மிகப்பெரிய யூத போராட்டம் ஒன்றின் பின்னர் பரிசில் இத்தனை யூதர்கள் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற பேரணி இடம்பெற்றது. Lyon, Grenoble, Lille, Marseille, Nice போன்ற நகரங்களில் 75,000 பேர் வரை பங்கேற்றனர். மொத்தமாக நாடு முழுவதும் 182,000 பேர் பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.