Paristamil Navigation Paristamil advert login

இன்று யூதர்களுக்கு எதிரான எதிர்ப்பை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் குடியரசு தலைவர் ஏன் இல்லை?

இன்று யூதர்களுக்கு எதிரான எதிர்ப்பை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் குடியரசு தலைவர் ஏன் இல்லை?

12 கார்த்திகை 2023 ஞாயிறு 19:14 | பார்வைகள் : 6109


பிரான்ஸ் முழுவதும், ஹமாஸ் இஸ்ரேல் போரின் பின்னர் யூதர்களுக்கு  எதிரான எதிர்ப்பு சம்பவங்கள், யூத மதத்திற்கு எதிரான வாசகங்கள் என பல அசம்பாவிதங்கள் நடந்து வரும் நிலையில், யூத எதிர்ப்புக்கு எதிரான மாபெரும் ஊர்வலம் இன்று பிரான்சில் நடைபெற்றுள்ளது.

இந்த ஊர்வலத்தில் மத, கட்சி பேதமின்றி சுமார் 182 000 மக்கள் பங்குபற்றினார்கள் என உள்துறை அமைச்சு  அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாபெரும் ஊர்வலத்தில் குடியரசு தலைவர் Emmanuel Macron பங்குபெறுவார் என பல்வேறுபட்ட செய்திகள் முன்பு வெளியாகியிருந்தது.  ஆனால் இன்றைய மாபெரும் ஊர்வலத்தில் குடியரசுத் தலைவர் பங்கு பற்றவில்லை.

பிரான்ஸ் தேசத்தின் ஒரு குடியரசு தலைவர் பொதுமக்களோடு எதிர்ப்பு ஊர்வலங்களில் பங்கு பற்றுவது, குடியரசு தலைவருக்கு இருக்கும் சம்பிரதாயங்களை அவமதிக்கும் செயலா? இதுவரை எந்த ஒரு தலைவரும் இவ்வாறான ஊர்வலங்களில் பங்குபற்றவில்லையா?

அப்படி ஒரு சம்பிரதாயம் இல்லை, ஆனால் மிகவும் அரிதாகவே நடந்துள்ளது. ஒன்று Vaucluse பகுதியில் யூத கல்லறைகளை இழிவுபடுத்திய பின்னர், இனவெறி மற்றும் யூத எதிர்ப்புக்கு எதிரான பேரணியில் 1990ல் அன்றைய குடியரசுத் தலைவர் François Mitterrand அவர்கள் பங்குபற்றி உள்ளார், அதேபோல் 2015ம் ஆண்டு Charlie Hebdo பத்திரிகையின் தலைமைப் பீடத்தின் மீதும், Hyper Cacher யூத பல்பொருள் அங்காடி மீதும் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னர் நடைபெற்ற பேரணியில், பல உலக நாட்டுத் தலைவர்களுடன் அன்றைய குடியரசுத் தலைவர் François Hollande அவர்கள் பங்குபற்றியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்