Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் செய்த நெகிழ்ச்சியான செயல்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் செய்த நெகிழ்ச்சியான செயல்

13 கார்த்திகை 2023 திங்கள் 02:54 | பார்வைகள் : 3883


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் செய்த செயலால் இந்திய ரசிகர்களின் பேரன்பை பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியினர் விளையாடிய விதம் சர்வதேச அளவில் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றது.

குறிப்பாக இந்திய ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு தங்கள் ஆதரவை அளித்தனர். 

இதற்கு காரணம் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஆப்கான், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்காக கடுமையாக போராடியது.

அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனாலும், இந்திய ரசிகர்கள் தங்களுக்கு அளித்த ஆதரவுக்கு ஆப்கான் வீரர்கள் நன்றி கூறி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர். 

இந்த நிலையில் ஆப்கானின் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ், அகமதாபாத்தின் இரவு வேளையில் தெருக்களில் உறங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுத்தார்.

அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் அருகில் பணம் வைத்தார் குர்பாஸ். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனை குறிப்பிட்டு நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா எக்ஸ் பக்கத்தில் குர்பாஸை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

'இந்த ஆப்கானிஸ்தான் ஆண்கள் சுத்த தங்கம், அத்தகைய கனிவான இதயம் கொண்ட கிரிக்கெட் வீரர்கள்.

இந்தியாவில் அவர்கள் மிகவும் நேசிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. 

இந்தியாவில் களத்திலும் வெளியிலும் இதயங்களை வென்றவர்' என தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்