இரு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒருவர் Champs-Élysées இல் கைது!

13 கார்த்திகை 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 13531
இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவரை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
8 ஆம் வட்டாரத்தில் Champs-Élysées வீதில் இக்கைது சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய ஒருவர் நவம்பர் 11 ஆம் திகதி அன்று 19 மற்றும் 27 வயதுடைய இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். அவர்களில் ஒருவர் கத்தி முனையில் மிரட்டப்பட்டுள்ளார். அடுத்தடுத்து இடம்பெற்ற இச்சம்பவம் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையினால், அப்பகுதி முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு விரைவாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.