Bouygues நிறுவனத்தில் ஆயுத முனையில் கொள்ளை! - பலநூறு தொலைபேசிகள் திடுட்டு!!
13 கார்த்திகை 2023 திங்கள் 11:00 | பார்வைகள் : 16373
Bouygues தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு சொந்தமான காட்சியறை ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
Lieusaint (Seine-et-Marne) உள்ள Carré-Sénart வணிக வளாகத்தில் இந்த காட்சியறை அமைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுததாரிகள், அங்கு இருந்த விற்பனை முகவர்களை மிரட்டி, கொள்ளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஐபோன் மற்றும் சாம்சங் தொலைபேசிகளை கொள்ளையிட்டுக்கொண்டு சென்றனர்.
மொத்தமாக 100 தொலைபேசிகள் வரை கொள்ளையிடப்பட்டதாகவும், அதன் மதிப்பு ₤100,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan