Paristamil Navigation Paristamil advert login

காசா மீதான போர் தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை

காசா மீதான போர் தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை

13 கார்த்திகை 2023 திங்கள் 07:35 | பார்வைகள் : 8320


இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் காசா மீதான தங்கள் பிடியை இழந்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப்படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11,078 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 40 சதவீதமான குழந்தைகள் என்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தனர். 

இதனையடுத்து தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் தாக்குதலினால் ஹமாஸ் காசா மீதான தங்கள் பிடியை இழந்து வருகின்றனர் என IDF மூத்த செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'கீழ்ப்படியாமை, கொள்ளையடித்தல் மற்றும் சமூக ஊடகங்களில் ஹமாஸ் மீதான முன்னோடி இல்லாத விமர்சனங்கள், காசாவில் ஹமாஸின் கட்டுப்பாடு நழுவி வருவதைக் காட்டுகின்றன. 

எங்கள் மதிப்பீடு என்னவென்றால், அவர்களின் கட்டளை செயல்பாடுகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை திறம்பட நடத்துவதற்கும், மக்களை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களின் திறன் ஆகியவை சவாலாக உள்ளன' என தெரிவித்துள்ளார்.     

வர்த்தக‌ விளம்பரங்கள்