"அரசாங்கத்தின் சட்டத்திற்கு அடிபணிய மாட்டோம், இலவசமாக மருத்துவம் பார்ப்போம்" 3500 மருத்துவர்கள்.
13 கார்த்திகை 2023 திங்கள் 11:15 | பார்வைகள் : 6348
கடந்த வாரம் 3500 அரச, தனியார் மருத்துவர்கள், அதிலும் சிறப்பாக நோபல் பரிசு பெற்ற மருத்துவர் கையொப்பம் இட்டு le monde பத்திரிகையின் ஊடாக அரசுக்கு விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர். ஆவணமற்ற, குடியேற்ற வாசிகளுக்கு வழங்கப்படும் அரச மருத்துவ உதவியை (AME) அரசு ரத்துசெய்ய கூடாது என அவர்கள் தங்கள் வேண்டுகோளில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் மேல்ச்சபை (AME) அரச மருத்துவ உதவியை ரத்துசெய்யும் படி வாக்களித்து விட்டு, அதற்கு ஈடாக ஆவணமற்றவர்களின் மிகக் கடுமையான நோய்களுக்கு மட்டுமே அரச மருத்துவ உதவி வழங்கலாம் என சிபாரிசு செய்துள்ளது.
இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் தாங்கள் அந்த சட்டத்திற்கு அடிபணியாமல் ஆவணமற்ற குடியேற்ற வாசிகளுக்கு இலவசமாகவே எல்லா நோய்களுக்கும் மருத்துவம் பார்ப்போம் என கூட்டாக கையொப்பம் இட்ட 3500 மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
"உங்களுக்கு எங்களின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், உங்களின் தேசியம், மதம், இனம், நிறம் எதுவுமே இங்கு பார்க்கப்பட மாட்டாது. மருத்துவம் மட்டுமே பார்க்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளனர்.