Paristamil Navigation Paristamil advert login

அட்லியின் அதிரடி அடுத்த படம் ரூ.2000 கோடி வசூலா?

அட்லியின் அதிரடி அடுத்த படம் ரூ.2000 கோடி வசூலா?

13 கார்த்திகை 2023 திங்கள் 12:50 | பார்வைகள் : 2111


பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிக்க இருப்பதை அடுத்து அந்த படம் 2000 கோடி வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபத்தில் அளித்த பேட்டியில் அட்லி கூறியபோது, ‘விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் இணைத்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று சீரியசாக ஒரு திட்டத்தை போட்டு வருகிறேன். இருவருக்கும் பொருத்தமான கதையையும் தேர்வு செய்து வருகிறேன். அனேகமாக அது எனது அடுத்த படமாக கூட இருக்கலாம். விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவருமே எனது இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் எனக்கு ஊக்கத்தையும் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

எனவே அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் நடந்தால் இந்த படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்