சிரியாவில் ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதல்கள்
13 கார்த்திகை 2023 திங்கள் 13:06 | பார்வைகள் : 3861
சிரியாவின் இட்லிப்பில் ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அதில் 34 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
"ரஷ்ய விண்வெளிப் படைகள் இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசாங்கப் படைகளின் நிலைகளில் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது," என ரியர் அட்மிரல் Vadim Kulit கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 24 மணித்தியாலத்தில் சிரிய அரசாங்கப் படைகளின் நிலைகள் ஏழு முறை தாக்கப்பட்டதாக Kulit கூறியுள்ளார்.
இட்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது தாக்குதல்களை நடத்தியதற்கு இஸ்லாமிய ஜிஹாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் கிளர்ச்சியாளர்களை சிரிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி சிரிய வான்வெளியை மீறியதாக ரஷ்ய குற்றச்சாட்டை Kulit திரும்பத் திரும்ப கூறினார்.
முன்னதாக, சிரியாவில் ஈரானுடன் இணைந்த குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.