Arras நகரில் பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!!

13 கார்த்திகை 2023 திங்கள் 13:17 | பார்வைகள் : 6553
Arras நகரில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பாடசாலைகளில் வெளியேற்றம் இடம்பெற்றது.
இன்று திங்கட்கிழமை காலை இந்த அச்சுறுத்தல்கள் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டிருந்தது. Arras நகரில் உள்ள Oscar Cléret பாடசாலை, Dainville நகரில் உள்ள Charles Perrault மற்றும் Arras நகரின் புறநகர்களில் உள்ள Bodel மற்றும் Saint-Vincent பாடாலைகளுக்கும் இந்த குண்டுப்புரளி விடுக்கப்பட்டது. அதையடுத்து பாடசாலைகள் மூடப்பட்டன. மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு தேடுதல் பணி இடம்பெற்றது.
இதே Arras நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே சென்ற மாதம் ஆசிரியர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.