Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் பழமைவாய்ந்த, மக்களால் விரும்பப்படும் "camembert" சீஸ் சந்தித்துள்ள நெருக்கடி.

பிரான்சின் பழமைவாய்ந்த, மக்களால் விரும்பப்படும்

13 கார்த்திகை 2023 திங்கள் 20:58 | பார்வைகள் : 4223


" சீஸ் பிரான்சின் நீண்ட கால பாரம்பரிய உணவு. காலை, மதியம், இரவு என சகலநேர உணவிலும் "camembert" இடம்பிடித்து வருகிறது, பல்வேறுபட்ட சீஸ் வகைகள் பிரான்சில் இருந்தபோதும்; வறுமைப்பட்டவரும், வசதிபடைத்தவரும் விரும்பி உண்ணும் "camembert" சீஸ் அதன் மர இழையிலான பெட்டியால் சர்சையைச் சந்தித்துள்ளது.

குறித்த மர இழையிலான பெட்டி சுற்றுச்சூழல் மாசடைதவை ஏற்படுத்துகிறது, மறுசுழற்சி செய்யும் போது அதிக செலவீனத்தை ஏற்படுத்துகிறது எனவே அதனை மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால் அதன் தயாரிப்பாளர்கள் அதனை அடியோடு மறுக்கின்றனர் "camembert" சீஸ், அதன் பெட்டியின் வடிவமைப்பு இரண்டும் பாரம்பரியம் ஒன்றை ஒன்று இழந்தால் அதன் வரலாறும், அதன் பாரம்பரியமும் சிதைத்து விடும்" என வாதிடுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் "camembert" 2030, 2035 வரை தன் அழகையும், சுவையையும் இழக்காது என்றே கூறப்பட்டாலும். மாற்றவேண்டும் எனும் வேண்டுகோள் வலுபெற்றே வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்