Paristamil Navigation Paristamil advert login

புலம்பெயர்ந்த இலங்கையர்களால் அந்நிய செலாவணி அதிகரிப்பு

புலம்பெயர்ந்த இலங்கையர்களால் அந்நிய செலாவணி அதிகரிப்பு

14 கார்த்திகை 2023 செவ்வாய் 04:12 | பார்வைகள் : 2256


வெளிநாட்டு தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 517.4 மில்லியன் டொலர்களை அந்நிய செலாவணியாக நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மே மாதம் முதல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவியேற்றதிலிருந்து 7.6 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணியாக பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட அந்நிய செலாவணி 45.63 வீத அதிகரிப்பைக் காட்டுகிறது.

அத்துடன், இவ்வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 4,862.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாக பெறப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாக பெறப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் முதல் பத்து மாதங்களில் அந்நிய செலாவணி 66 வீதத்தால் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்