யாழில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
14 கார்த்திகை 2023 செவ்வாய் 05:47 | பார்வைகள் : 6790
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவத்தின் போது, எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan