Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் பயன்படுத்தப்பட்ட 49.3 அரசியலமைப்பு! - நம்பிக்கை இல்லா பிரேரணை! - பிரதமர் பங்கேற்கவில்லை!!

மீண்டும் பயன்படுத்தப்பட்ட 49.3 அரசியலமைப்பு! - நம்பிக்கை இல்லா பிரேரணை! - பிரதமர் பங்கேற்கவில்லை!!

14 கார்த்திகை 2023 செவ்வாய் 06:31 | பார்வைகள் : 3331


2024- 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இறுதிக்கட்ட சமர்பிப்பு நேற்று பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது. 

நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றத்தில் இந்த வரவுசெலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. பிரதமர் Élisabeth Borne இதில் பங்கேற்கவில்லை. அவருடைய பிரதிநிதி ஒருவர் இதனை வாசித்ததோடு, வாக்கெடுப்புக்குச் செல்லாமல் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி அதனை நிறைவேற்றினார். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மக்ரோனின் அரசு பலதடவைகள் இந்த 49.3 எனும் அரசியலமைப்பை பயன்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி-அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் சட்டமே இந்த 49.3 ஆகும்.

அதனை மக்ரோனின் அரசாங்கம் தொடர்ச்சியாக பயன்படுத்துவது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் பெரும் விமர்சனத்தை முன்வைத்தனர். 

La France insoumise கட்சியினர் உடனடியாக மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பித்தனர். இம்முறை நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பெற்று மக்ரோனின் அரசாங்கத்தை வெளியேற்றுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே நேற்றைய நாள் பிரதமர் பாராளுமன்ற வாசிப்பில் கலந்துகொள்ளவில்லை. அயர்லாந்துக்கு பிரதமர் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்