Paristamil Navigation Paristamil advert login

ரோஹித் சர்மாவை புகழும் பாகிஸ்தான் வீரர்

ரோஹித் சர்மாவை புகழும் பாகிஸ்தான் வீரர்

14 கார்த்திகை 2023 செவ்வாய் 09:22 | பார்வைகள் : 1799


இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா போல் ஒரு வீரரை பார்த்ததே இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவை வைத்து நடைபெற்று வரும் நிலையில், இதன் லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் இந்திய வீரர் ரோஹித் சர்மா போல் ஒரு வீரரை பார்த்ததே இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார்.

நான் விராட் கோலி, ஜோ ரூட், வில்லியம்சன், பாபர் அசாம் போன்ற வீரர்களை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் ரோஹித் சர்மா முற்றிலும் மாறுபட்ட வீரர். எந்த சூழ்நிலையிலும், எந்தவொரு பந்து வீசினாலும் சுலபமாக ஓட்டங்களை குவித்து பேட்டிங்கில் அசத்துகிறார் என  பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்