Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி - நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

 இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி -  நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

15 கார்த்திகை 2023 புதன் 02:55 | பார்வைகள் : 1646


இந்திய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது மிகவும் சிறப்பானது என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதில் லீக் சுற்றுகள் அனைத்து நிறைவடைந்துள்ள நிலையில் அரையிறுதி போட்டிகள் இன்று நவம்பர் 15 ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளனர். 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் 15ம் திகதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதப்போவது குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பை அரையிறுதியில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை நாங்கள் பெரிய அளவிலான ரசிகர்கள் மத்தியில் விளையாடியது பிற நாடுகளில் தான், எங்கள் மண்ணில் உள்ள மைதானங்கள் மிகவும் சிறியவை மற்றும் மைதானங்களும் பெரிய அளவில் நிரம்பாது.

ஆனால் அரையிறுதி போட்டியில் மும்பை வான்கடே மைதானம் முழுவதும் நீல ஜெர்சிக்களால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்