காசாவின் மருத்துவமனைக்குள்ளேயே புதைக்கப்படும் உயிரிழந்தவர்களின் உடல்

15 கார்த்திகை 2023 புதன் 03:09 | பார்வைகள் : 5647
இஸ்ரேல் நாடானது காசா பிரதேசத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் மருத்துவமனைகள் மீதும் பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
காசாவின் அல்ஷிபா மருத்துவமனைக்குள் உயிரிழந்த 200 பேரின் உடல்களை மருத்துவமனைக்குள்ளேயே பாரிய புதைகுழியொன்றிற்குள் புதைத்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்குள் 200 உடல்களை புதைத்துள்ளதாக மருத்துவர் அட்னான் அல் பேர்ஸ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் 200 உடல்களை புதைத்தனர் சுமார் 6 மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
உடல்கள் பல நாட்களாக சிதைவடையும் நிலையில் கைவிடப்பட்டிருந்தன இதன் காரணமாக பாரியமனித புதைகுழியொன்றை தவிர மருத்துவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை என எலும்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவரான வைத்தியர் அல்பேர்ஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் கொல்லைபுறத்திலிருந்து வரும் துர்நாற்றம் காரணமாக எங்களால் ஜன்னல்களை திறக்க முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் அங்கு 120 உடல்கள் காணப்பட்டன அவற்றையும் புதைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர பிரேத அறையில் 80 உடல்கள் காணப்பட்டன.
அதிகமாக பெண்கள் சிறுவர்களின் உடல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.