Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்து விபத்து - மாணவி ஒருவர் பலி

இலங்கையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்து விபத்து - மாணவி ஒருவர் பலி

15 கார்த்திகை 2023 புதன் 08:28 | பார்வைகள் : 5499


வெல்லம்பிட்டி - வேரகொட கனிஷ்ட பாடசாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலையின் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள சுவர் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி பயின்றுவந்த மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒரு மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்