Paristamil Navigation Paristamil advert login

வெங்காய போண்டா..

வெங்காய போண்டா..

15 கார்த்திகை 2023 புதன் 10:28 | பார்வைகள் : 2357


பிடித்த உணவை சுவையாக அதேசமயம் சுட சுட செய்து சாப்பிடும் போது அதைவிட பேரானந்தம் என்ன இருக்க முடியும்.. அந்த வகையில் பலரும் விரும்பி சாப்பிடும் டீ கடை போண்டாவை வீட்டிலேயே சூடாக சுட்டு சாப்பிட ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள் 

கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மைதா மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீ கடை வெங்காய போண்டா ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்