கடன் வாங்குவதில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடம் : அண்ணாமலை
15 கார்த்திகை 2023 புதன் 15:02 | பார்வைகள் : 2976
அரியலூர் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையை பா .ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார்.
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வேலாயுத நகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய யாத்திரை ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் முடிவடைகிறது வழி நெடுகிலும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு அண்ணாமலையின் யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மேலும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அவரிடம் வழங்கி வருகின்றனர் யாத்திரையில் மாநில மாவட்ட பா .ஜ. நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
யாத்திரையில் முடிவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக யாத்திரையில் பங்கேற்று வருகிறேன்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை விவசாய உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை இல்லை இதனை மாற்ற பாஜக விரும்புகிறது.
ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சியடையும் போது தான் தமிழகம் வளர்ச்சி அடையும் மது இல்லா தமிழகம் கொலை கொள்ளை இல்லா தமிழகம் உருவாக பாஜக யாத்திரை மேற்கொண்டுள்ளது.
திமுக இரண்டரை வருட ஆட்சியை முடித்துள்ளார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த போது இருந்த தமிழகத்தின் வளர்ச்சி தற்பொழுது குறைந்துள்ளது தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக்குக்கு இலக்கு வைத்து விற்பனை செய்தது இதன் காரணமாக தீபாவளி சமயத்தில் மட்டும் 20 கொலை கொள்ளைகள் நடந்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் ஊழல் இல்லாத இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தி உள்ளார்.
அனைத்து ஏழை எளிய குழந்தைகளை மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என மத்திய அரசு வழங்கி வருகிறது தகுதி வாய்ந்த அனைத்து குழந்தைகளும் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்திலேயே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது ஆனால் திமுக பிரமுகர்கள் நடத்தக்கூடிய மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி மக்கள் முன் நாடகத்தை நடத்தி வருகிறார்கள் இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்தும் வருகிறார்கள்
2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கடந்த 1997 ஆம் ஆண்டு 8373 ஏக்கர் கையகப்படுத்திய நிலத்தை 35 ஆண்டுகள் கழித்து தற்போது விவசாயிகளிடமே ஒப்படைப்பதாக திமுக அரசு தெரிவித்துள்ளது இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் இத்திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால் வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சி ஆகியவை அரியலூர் மாவட்டத்தில் பெருகி இருக்கும்
தற்போதுள்ள திமுக அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது ஊழல் மிகுந்த அரசாக திமுக அரசு உள்ளது தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது இவ்வாறு அனைத்து விதத்திலும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது
ஆனால் மத்திய பாஜக அரசு ஏழை எளிய மக்கள் விவசாயிகள் சிறு குறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களுக்கான அரசாக கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ஊழல் குறை சொல்ல முடியாத அரசாங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார் எனவே வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்