Paristamil Navigation Paristamil advert login

உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பட்டாணி..

உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பட்டாணி..

15 கார்த்திகை 2023 புதன் 15:21 | பார்வைகள் : 2512


உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், பச்சை பட்டாணியை அவசியம் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க உதவுவதற்கு ஏன் பச்சை பட்டாணியை பரிந்துரைக்கிறோம் என்பதற்கான 6 காரணங்கள் இதோ…

குறைவான கலோரி: அரை கப் சமைத்த பச்சை பட்டாணியில் 81 கிராம் கலோரியும் 0.4 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான எடையை பரமாரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அல்லது உடல் எடைய குறைக்க விரும்புகிறவர்கள் தாராளமாக பட்டணியை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிக புரதம்: நமது உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்தவும் சீர் செய்யவும் புரத்தச்சத்து மிகவும் அவசியம். மேலும் புரத உணவுகள் வயிறு நிறைவை தரக்கூடியது. இதனால் கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் எடையும் குறைகிறது. அரை கப் சமைத்த பட்டாணியின் 5 கிராம் புரதம் உள்ளது.

எடை குறைப்பு: பட்டாணியில் அதிகளவு புரதமும் நார்ச்சத்தும் உள்ளதால், குறைவாக சாப்பிட்டாலே நம் வயிறு நிரம்பிவிடுகிறது. இதன் காரணமாக எளிதில் பசி எடுக்காது. உடல் எடையும் கூடாது.

நார்ச்சத்து: உடல் எடையை குறைக்க உதவும் இன்னொரு முக்கியமான ஊட்டச்சத்து நார்ச்சத்து. இது உங்கள் உடலில் கலோரிகள் அதிகமாவதை குறைக்கிறது.

டயாபடீஸை கட்டுக்குள் வைத்திருக்கிறது: எந்தளவிற்கு வேகமாக ஒரு உணவு சர்க்கரை அளவை அதிகரிக்கிறதோ, அதை வைத்து க்ளைசைமிக் குறியீடு கணக்கிடப்படும். குறைவான க்ளைசைமிக் குறியீடு கொண்ட உணவுகள் எளிதில் செரிமானமாகும். மேலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். பச்சை பட்டாணியின் க்ளைசைமிக் குறியீடு 48 மட்டுமே.

வைட்டமின் மற்றும் மினரல்: பச்சை பட்டாணியில் அதிகளவு வைட்டமின் ஏ, சி மற்றும் கே உள்ளது. அதேப்போல் இரும்புச்சத்து, மாக்னீசியம், பொட்டாசியம் போன்ற மினரல்களும் உள்ளது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உடல் எடையும் குறைக்கிறது.

பச்சை பட்டாணியை சமைத்தோ, உறைய வைத்தோ அல்லது சமைக்காமல் அப்படியே கூட சாப்பிடலாம். இதை சாலாடிலோ, சூப்பிலோ சேர்த்து அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்