Oise பகுதியில் உள்ள இராணுவக் கல்லறையில் யூத வீரர்களின் பத்து கல்லறைத் தூண்கள் சேதமாக்கப் பட்டுள்ளது.
15 கார்த்திகை 2023 புதன் 18:03 | பார்வைகள் : 3896
பிரான்சில் Oise பகுதியில் Moulin-sous-Touventல் முதலாம் உலகப் போரில் மரணித்த பிரான்ஸ், ஜேர்மனி, யூத இராணுவ வீரர்களின் ஜேர்மனிய கல்லறைத் தோட்டம் நீண்ட காலமாக பாரம்பரியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
குறித்த கல்லறைத் தோட்டத்தில் உள்ள பத்து யூத வீரர்களின் கல்லறைத் தூண்கள் சிதைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. Compiègne அரச வழக்கறிஞர் மன்றம் உடனடியாக விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இன, மத, மொழி வேறுபாடின்றி கல்லறைகளை, நினைவிடங்களை, அவமதிப்பது, சிதைப்பது மனிதாபிமானம் அற்ற செயல் என கண்டிக்கப்பட்டுள்ளதுடன் gendarmerie விசாரணைகளை தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron குறித்த செயலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ், இஸ்ரேல் போர் தொடங்கிய பின்னர் பிரான்சில் 1,500 க்கும் மேற்பட்ட யூத-விரோத செயல்கள் அல்லது கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சரால் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.