டிக்டொக் செயலிக்கு அதிரடி தடை விதித்த நேபாளம்
16 கார்த்திகை 2123 செவ்வாய் 01:38 | பார்வைகள் : 1731
பிரித்தானியா, இந்தியா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் டிக்டொக் செயலிக்கு ஏற்கனவே தடை விதித்திருக்கின்ற நிலையில் நேபாள அரசு அமைச்சரவையும் டிக்டொக்கை தடை செய்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ‘பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம், டிக்டொக் என்ற சமூக வலைத்தள செயலியை உருவாக்கியது.
டிக்டொக் செயலி உலகம் முழுவதும் தற்போது செயல்பட்டு வந்தது.
அண்மைக் காலமாக டிக்டொக் செயலியின் மூலமாக பல்வேறு மதத்தினர் இடையே வெறுப்புணர்வு தூண்டும் வகையில் காணொளிகள் பதிவிட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக, நேபாள அரசு கண்டறிந்துள்ளது.
இதையடுத்து, பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டிக்டொக் செயலிக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.