இங்கிலாந்தில் 140 மில்லியன் வருட டைனோசரின் கால் தடம் கண்டுபிடிப்பு
16 கார்த்திகை 2023 வியாழன் 02:04 | பார்வைகள் : 2214
இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள தீவுகளில் ஒன்றான பிரவுன்சீ தீவு (Brownsea Island) இயற்கை வனப் பகுதியில் டைனோசரின் ஒன்றின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கால் அடையாளமானது140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது என தெரிவிக்கப்படுகிறது.
இதனை இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றதோடு அந்த தீவிலுள்ள பிரவுன்சீ கேஸில் பகுதியில் ஒரு வனத்துறை அதிகாரி ஆராய்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.