மீண்டும் தோல்வியில் முடிந்த நம்பிக்கை இல்லா பிரேரணை! - வரவுசெலவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டும்!

16 கார்த்திகை 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 7916
மக்ரோனின் அரசாங்கம் மீது கொண்டுவரப்பட்ட புதிய நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியில் முடிந்துள்ளது. போதிய ஆதரவு வாக்குகள் பதிவாகவில்லை என்பதால் சபாநாயகர் இதனை நிராகரித்தார்.
2023-2027 ஆம் ஆண்டுவரையான வரவுசெலவுத்திட்டத்தினை நிறைவேற்றும் பணியில் பிரதமர் Elisabeth Borne ஈடுபட்டுள்ளார். பெரும்பான்மை இல்லாத மக்ரோனின் அரசாங்கம் 49.3 எனும் அரசிலமைப்பை பயன்படுத்தி, வாக்கெடுப்பு இன்றி இதனை கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை இந்த வரவுசெலவுத்திட்டத்தின் ஒரு பகுதி, பிரதமர் இல்லாமல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (அன்றைய நாளில் பிரதமர் அயலாந்துக்கு அரச பயணம் மேற்கொண்டிருந்தார்)
இதனால் பல எதிர்கட்சிகள் இணைந்து மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்திருந்தனர்.
நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஆதரவாக குறைந்தது 289 வாக்குகள் தேவை எனும் நிலையில், 143 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
இதனால் சபாநாயகர் இந்த பிரேரணையை நிராகரித்தார். அதேவேளை, மேற்குறித்த ஆண்டுகளுக்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தால் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1