முழுமையான ஆதரவு - மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு

16 கார்த்திகை 2023 வியாழன் 06:28 | பார்வைகள் : 5726
2024ஆம் நிதிண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன தமது முழுமையான ஆதரவை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி என்பதை வலியுறுத்திய மஹிந்த ராஜபக்ஷ, வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் பொதுஜன பெரமுன செயல்படாது என்றும் சுட்டிக்காட்டினார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று இரவு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையில், வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நேற்றுமுன்தினம் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருந்ததாவது,
வரவு - செலவு திட்டத்தில் மக்களுக்கு பயன்தரும் விடயங்கள் எதுவும் இல்லை.
அதனால், வரவு - செலவு திட்டத்தை தோற்கடிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. வரவு - செலவு திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்.
பிரச்சினை வரவு - செலவுத் திட்டத்திலோ அல்லது அதன் திட்டங்களிலோ இல்லை. அதைச் செயல்படுத்துவதில்தான் உள்ளது.
வரவு - செலவுத் திட்டம் மோசமானதொன்றல்ல. ஆனால் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் முறையாக செயல்படுத்தப்படாததுதான் பிரச்சினை. இந்த பட்ஜெட்டில் பல முன்மொழிவுகள் கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் முன்மொழியப்பட்டது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1