Paristamil Navigation Paristamil advert login

கைவிடப்படும் பொதிகளினால் மெற்றோ சேவைகள் தாமதத்தை சந்திக்கின்றன! - RATP கவலை!!

கைவிடப்படும் பொதிகளினால் மெற்றோ சேவைகள் தாமதத்தை சந்திக்கின்றன! - RATP கவலை!!

16 கார்த்திகை 2023 வியாழன் 07:48 | பார்வைகள் : 4011


முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு மெற்றோ சேவைகள் தாமதங்களைச் சந்திக்கின்றன. பயணிகள் தொடருந்து நிலையங்களில் தங்களது பொதிகளை விட்டுச் செல்வதால் ஏற்படும் குழப்பங்களினால் இந்த தாமதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்துக்களுக்கான சபை (Ile-de-France Mobilités (IDFM)) வெளியிட்ட மாதாந்த அறிக்கையின் படி, சென்ற செப்டம்பர் மாதம் பரிஸ் மற்றும் புறநகர்களில் பயணிக்கும் மெற்றோ சேவைகள் மிகுந்த தாமதங்களைச் சந்தித்துள்ளது. 3 ஆம், 8 ஆம், 9 ஆம், 12 ஆம் மற்றும் 13 ஆம் இலக்க மெற்றோக்கள் பெருமளவில் தாமதங்களைச் சந்தித்துள்ளன.

இந்த செப்டம்பரில், 3 ஆம் இலக்க மெற்றோ மொத்தமாக 17 மணிநேரங்கள் தாமதத்தைச் சந்தித்துள்ளன. மேற்குறிப்பிட்ட ஏனைய மெற்றோக்கள் ஆறு மணிநேரத்துக்கும் அதிகமான தாமதத்தினை சந்தித்துள்ளன.

பொதிகள் கைவிட்டப்படுவது நடப்பு ஆண்டில் 70% சதவீதமாக அதிகரித்துள்ளது.



 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்