காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க மறுக்கும் அமெரிக்க ஜனாதிபதி
16 கார்த்திகை 2023 வியாழன் 09:39 | பார்வைகள் : 4131
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தான் காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க மறுத்துள்ளதை நியாயப்படுத்தியுள்ளார்
ஹமாஸ் இஸ்ரேலிற்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள அவர் இஸ்ரேல் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக முயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதியுடனான உச்சிமாநாட்டின் பின்னர் பைடன் இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் கண்மூடித்தனமான தொடர்ச்சியான குண்டுவீச்சில் ஈடுபடவில்லை அவர்கள் வேறு விடயங்களை முயற்சிக்கின்றனர் அவர்கள் இந்த சுரங்கப்பாதைகளுக்கு ஊடாக செல்கின்றனர் அவர்கள் மருத்துவமனைக்கு செல்கின்றனர் அவர்கள் இன்குபேட்டர்களை கொண்டு செல்கின்றனர் மருத்துவமனைகளில் வேறு வழிகளில் உதவுகின்றனர் என பைடன் தெரிவித்துள்ளார்.