ரொறன்ரோவில் வாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை
16 கார்த்திகை 2023 வியாழன் 09:52 | பார்வைகள் : 4389
கனடாவில் ரொறன்ரோ நகரில் 10 வீதமானவர்கள் கடுமையான வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவைச் சேர்ந்த பத்து வீதமான மக்கள் உணவு வங்கிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
கடந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது ரொறன்ரோவில் உணவு வங்கிகளில் தங்கியிருப்போர் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது.
அண்மையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம், வீட்டு விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு ஏதுக்களினால் இவ்வாறு மக்கள் அதிகளவில் உணவு வங்கிகளை நாட நேரிட்டுள்ளது.
ரொறன்ரோவில் இந்த ஆண்டில் 2.53 மில்லியன் தடவைகள் உணவு வங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் உணவு வங்கிகளில் உதவி பெற்றுக் கொண்ட தடவைகளின் எண்ணிக்கை மூன்று மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.