Paristamil Navigation Paristamil advert login

வேலையில்லாதோரின் எண்ணிக்கை மூன்றாவது காலாண்டில் திடீர் அதிகரிப்பு!!

வேலையில்லாதோரின் எண்ணிக்கை மூன்றாவது காலாண்டில் திடீர் அதிகரிப்பு!!

16 கார்த்திகை 2023 வியாழன் 10:08 | பார்வைகள் : 2851


பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை இவ்வருடத்தின் மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. 

இரண்டாவது காலாண்டில் 7.2% சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.2% சதவீதத்தால் அதிகரித்து தற்போது 7.4% சதவீதமாக உள்ளது. இத்தகவலை INSEE நிறுவனம் வெளியிட்டுள்ளது. "இந்த அதிகரிப்பு நாம் எதிர்பார்த்தது தான். உலக பொருளாதார சரிவின் ஒரு பகுதியாக இது உள்ளது!" என பிரெஞ்சு தொழிலாளர் அமைச்சர் Olivier Dussopt தெரிவித்தார்.

அதேவேளை, பணவீக்கம் மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 4.9% சதவீதமாக இருந்த பணவீக்கம் (GDP)  ஒக்டோபரில் 4% சவீதமாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்