பிரான்சில் தொடர்ந்தும் அதிகரித்து செல்லும் குடும்ப வன்முறையாகள். உள்துறை அமைச்சு.
16 கார்த்திகை 2023 வியாழன் 11:12 | பார்வைகள் : 4089
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து செல்கிறது. 2022ல் சுமார் 244 000 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட தொகை 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகியுள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். பெரும்பாலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவது பெண்கள், பாதிக்கப்பட்ட நபர்களில் 87% சதவீதம் பெண்களும், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 89% சதவீதம் ஆண்களும் அடங்குகின்றனர்.
வன்முறைகளில் உடலியல், வாய்மொழி வன்முறைகள் 30% சதவீதமும், உளவியல், பாலியல் வன்முறைகள் 13% சதவீதம் இடம்பெறுகிறது. பிரான்ஸ் முழுவதும் குடும்ப வன்முறைகள் பதிவானாலும், குறிப்பாக Seine-Saint-Denis, la Guyane, Pas-de-Calais, le Nord மற்றும் La Réunion ஆகிய பகுதிகளிலேயே மிக மோசமான அதே நேரத்தில் அதிகமான குடும்ப வன்முறைகள் இடம்பெறுகின்றன. குடும்ப வன்முறை பெரும்பாலும் 15 வயது முதல் 64, 65 வயது வரை நடைபெறுகிறது.