Paristamil Navigation Paristamil advert login

தோல்வியில் இருந்து தப்பிப்பாரா விக்ரம் ?

தோல்வியில் இருந்து தப்பிப்பாரா விக்ரம் ?

16 கார்த்திகை 2023 வியாழன் 11:57 | பார்வைகள் : 5238


மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் முதல் பாகம் அளவிற்கு வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. சில பல கதாபாத்திரங்களின் முடிவுகளை மணிரத்னம் மாற்றிவிட்டார் என்பதுதான் படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

அந்தப் படத்தில் கதாநாயகர்களாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்தனர். தெலுங்கில் 'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் மார்க்கெட் உயரே போனாலும் அவரால் 'பாகுபலி' அளவிற்கான வெற்றியை இன்னமும் தர முடியவில்லை. அது போலவே 'பொன்னியின் செல்வன் 2'க்குப் பிறகு ஜெயம் ரவி, கார்த்தி நடித்து வெளிவந்த படங்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன.

ஜெயம் ரவி நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த 'இறைவன்' படமும், கார்த்தி நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜப்பான்' படமும் தோல்வியைத் தழுவின. அடுத்து விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. ஜெயம் ரவி, கார்த்தியின் சென்டிமென்ட் விக்ரமையும் பாதிக்குமா அல்லது அவர் மீள்வாரா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்