Paristamil Navigation Paristamil advert login

மனைவியை காணவில்லை - வவுனியா பொலிஸில் கணவன் முறைப்பாடு

மனைவியை காணவில்லை - வவுனியா பொலிஸில் கணவன் முறைப்பாடு

16 கார்த்திகை 2023 வியாழன் 13:57 | பார்வைகள் : 6749


வவுனியாவில் வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

கடந்த 8 ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் ஒரு மணியளவில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி வயது 31 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0770780766. என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்