வெள்ள அனர்த்தம் தொடர்கிறது! - 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
16 கார்த்திகை 2023 வியாழன் 16:44 | பார்வைகள் : 3352
இன்று வியாழக்கிழமை மாலை பிரான்சின் பத்து மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Pas-de-Calais,
Nord,
Vendée,
Charente-Maritime.
Puy-de-Dôme,
Alpes-Maritimes,
Var,
Haute-Corse,
Meurthe-et-Moselle,
Vosges
ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும், அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, Puy-de-Dôme மாவட்டத்தில் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று நண்பகலின் பின்னர் Puy-de-Dôme மாவட்டத்தில் 111 மீட்புப்பணிகளை தீயணைப்பு படையினர் மேற்கொண்டிருந்ததாகவும், அங்கு 500 வரையான தீயணைப்பு படையினர் களத்தில் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Pas-de-Calais மாவட்டம் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் Elisabeth Borne ஆகியோர் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டுள்ளனர்.
அங்கு இடைவிடாத மழையும், வெள்ளமும் தொடர்கதையாகியுள்ளது. நாளை காலை 10 மணி வரை அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.