Paristamil Navigation Paristamil advert login

யாழில் மூதாட்டி கொலை - சந்தேகநபர்களுக்கு கிடைத்த தண்டனை

யாழில் மூதாட்டி கொலை - சந்தேகநபர்களுக்கு கிடைத்த தண்டனை

17 கார்த்திகை 2023 வெள்ளி 03:22 | பார்வைகள் : 2755


யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு பகுதியில் மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து  பழனிப்பிள்ளை தில்லைராணி என்ற 84 வயதான  மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடற்கூற்று பரிசோதனையின் போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும் , மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 19 வயது யுவதியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய போது, அவர்களை நேற்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்