Paristamil Navigation Paristamil advert login

காஸாவில் உணவு தட்டுப்பாடு - எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

காஸாவில் உணவு தட்டுப்பாடு -  எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

17 கார்த்திகை 2023 வெள்ளி 03:22 | பார்வைகள் : 3129


இஸ்ரேல் நாடானது காசா பிரதேசத்தின் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

காசாவில் வாழும் பொது மக்கள் பரிதாபமாக பலியாவதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக காஸாவில் பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளிர்காலம் நெருங்கி வருவதால், பாதுகாப்பற்ற மற்றும் நெரிசலான தங்குமிடங்கள் மற்றும் சுத்தமான தண்ணீர் இல்லாததால், பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என முதன்மை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பல வாரங்களாக எச்சரித்து வரும் இந்த ஐ.நா அமைப்பு, ரொட்டி தற்போது பற்றாக்குறையாக இருப்பதாகவும் அல்லது இல்லாது போன்ற நிலை இருப்பதாகவும், எஞ்சிய உணவால் தற்போதைய பசி தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னொரு பாதுகாப்பான வழித்தடம் உருவாக்குவதால் மட்டுமே காஸா மக்களின் உணவு பற்றாக்குறையை போக்க முடியும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை எகிப்தில் இருந்து வந்த டிரக்குகள் போதிய எரிபொருள் இல்லாததால் பொதுமக்களை சென்றடைய முடியாமல் போனதாகவும், எரிபொருள் பற்றாக்குறையும் உணவு விநியோகத்திற்கு தடையாக இருப்பதாக ஐ.நா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்