செனட் சபை அங்கத்தவர் கைது! - உதவியாளருக்கு போதை மருந்து வழங்கியதாக குற்றச்சாட்டு!!
17 கார்த்திகை 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 11480
உதவியாளர் ஒருவருக்கு போதைப்பொருள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு செனட் மேற்சபை அங்கத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loire-Atlantique மாவட்டத்தின் செனட் அங்கத்தவர் Joël Guerriau என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். 66 வயதுடைய அவர் கடந்த நவம்பர் 15 (புதன்கிழமை) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”"பலாத்காரம் அல்லது பாலியல் வன்கொடுமை செய்ய அவரது கட்டுப்பாட்டைக் கெடுக்கக்கூடிய ஒரு பொருளை அவருக்குத் தெரியாமல் வழங்கியுள்ளார்" என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறையும், 75,000 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan