Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்சுக்குள் பல இடங்களில் மழை! - வெள்ள அபாய எச்சரிக்கை!!

இல் து பிரான்சுக்குள் பல இடங்களில் மழை! - வெள்ள அபாய எச்சரிக்கை!!

17 கார்த்திகை 2023 வெள்ளி 08:34 | பார்வைகள் : 2649


இல் து பிரான்சுக்குள் இரண்டு மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 41 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் Yvelines மற்றும் Val-d'Oise மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன. நேற்று வியாழக்கிழமை தலைநகர் பரிசின் பெரும்பான்மையான இடங்களில் மழை பதிவாகியிருந்தது. இன்று வெள்ளிக்கிழமையும் மழை தொடரும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

அதேவேளை, Nord, Pas-de-Calais, Vendée மற்றும் Charente-Maritime ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்