ஜெனீவாவில் கோர விபத்து - பரிதாபமாக பலியாகிய முதியவர்

17 கார்த்திகை 2023 வெள்ளி 12:29 | பார்வைகள் : 8372
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், சாலை விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
அவர், இந்த ஆண்டில் சாலை விபத்தில் பலியாகும் பத்தாவது நபர் ஆகிறார்.
ஜெனீவாவிலுள்ள Meyrin என்னுமிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று நேற்று மதியம் விபத்துக்குள்ளானது.
அந்தக் காரை 79 வயது முதியவர் ஒருவர் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் மீது பலமாக மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கார், வயல் ஒன்றில் போய் விழ, காரை ஓட்டிய முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் இந்த விபத்துக்காண விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1