Paristamil Navigation Paristamil advert login

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையில் மிதக்கும் அணுமின் நிலையம்?

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையில் மிதக்கும் அணுமின் நிலையம்?

17 கார்த்திகை 2023 வெள்ளி 12:38 | பார்வைகள் : 2760


2032 ஆம் ஆண்டளவில், நாட்டிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்காக மிதக்கும் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அணுசக்தி சட்டத்தை தயாரிப்பதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணுசக்தி சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தற்போதைய சட்டத்தின்படி, இலங்கை அணுமின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகத்தைப் பெற வாய்ப்பில்லை.

அதன்படி, சம்பந்தப்பட்ட சட்டத்தை மாற்றுவதற்கான வரைவுகளைத் தயாரிப்பதே முதலில் செய்யப்பட வேண்டும். சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் சட்ட விவகார அலுவலகத்தின் அணுசக்தி மற்றும் ஒப்பந்தச் சட்டப் பிரிவின் தலைவர் அந்தோனி வெதரோல் உட்பட நான்கு பிரதிநிதிகள், அதற்கு உதவுவதற்காக அண்மையில் நாட்டுக்கு வந்தனர்.  

கொழும்பு துறைமுக நகரம், இலகுரக ரயில் உள்ளிட்ட நாட்டின் புதிய திட்டங்களுக்கு தொடர் மின்சாரம் தேவை. இதற்கு அணுசக்தி மின்சார வழங்கல் மிகவும் பொருத்தமான தெரிவாகும் இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்தார்.

இதற்கமைய, 400 மெகாவோட் திறன் கொண்ட மிதக்கும் அணுமின் நிலையம் குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்